| நாளைய தினத்திற்காக இன்றே பயிர் செய்வோம் |
|
| Written by Administrator |
| Friday, 15 May 2020 03:15 |
|
நாளைய தினத்திற்காக இன்றே பயிர் செய்வோம் உலகளாவிய கொவிட் -19 தொற்று நிலைமையின் மத்தியில் தேசித்தின் உணவுப் பாதுகாப்புநிலைக்காக இலங்கை அரசாங்கத்தினால் பயிர்ச்செய்கைப் போராட்டமொன்று தொடங்கப்பட்டுள்ளது. "நாளைய தினத்திற்காக இன்றே பயிர் செய்வோம்" எனும் தொனிப்பொருளை அடிப்படையாகக்கொண்டு நாடளாவியரீதியில் மேற்கொள்ளப்படுகின்ற இந்த செயற்பாங்கிற்கு தூண்டுதலளிக்குமுகமாக கூட்டாட்சி ஆதனங்களிலும் இந்த பயிர்ச்செய்கை முறைகளை விரிவாக்க நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைவாக கூட்டாட்சி ஆதனங்களில் உள்ள மட்டுப்படுத்தப்பட்ட இடவசதிகளை கிடையாகவும் குத்தாகவும் உச்ச அளவில் பாவனைக்கு எடுத்து முகாமைத்துவ கூட்டுத்தாபனத்தின் தலைமையிலும் இடையீட்டுடனும் பயிர்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆவனசெய்தல் வேண்டும். இதன்போது பயிர்ச்செய்கை சுவர்கள், மூங்கில் பயிர்ச்செய்கை, பயிர்ச்செய்கை உறைகள், பயிர்ச்செய்கை தட்டுகள், பயிர்ச்செய்கை சுவர்கள் மற்றும் கொள்கலன்களிலான செய்கைகள் போன்ற பயிர்ச்செய்கை வழிமுறைகளை பயன்படுத்த இயலுமென்பதோடு உங்கள் படைக்குந்திறனைப் பாவித்து பயிர்ச்செய்கை கொள்கலன்களை வைப்பதற்காக இரும்பிலான தாங்கிகளை பயன்படுத்தி கிடையாகவும் குத்தாகவும் கூட்டாட்சி ஆதனத்தின் இடவசதிகளை பயனுறுதிமிக்கதாக பாவனைக்கு எடுத்து பயிர்ச்செய்கையை மேற்கொள்ளல் வேண்டும். அத்துடன் இவ்விதமாக பயிர்ச்செய்கையை மேற்கொள்ளும்போது உயிர்ப்பாதுகாப்பு தொடர்பில் உங்களின் விசேட கவனம் செலுத்தப்படல் வேண்டும். அதாவது டெங்கு தொல்லைக்கு உங்களின் ஆதனங்கள் சொர்க்கபுரியாக அமைதலாகாது என்பதோடு உங்களின் தீ யன்னல்கள் தடைப்படுதல் மற்றும் பொது அம்சங்கள் தடைப்படுதல் ஆகாது. மேலும் உங்களுக்கு தேவையான பயிர்ச்செய்கை அறிவுறுத்தல்கள் விவசாயத் திணைக்களத்தினால் வழங்குவதற்கான தயார்நிலை காணப்படுகின்றது.
சட்டத்தரணி சரண கருணாரத்ன தலைவர் கூட்டாட்சி முகாமைத்துவ அதிகாரசபை |
| Last Updated on Friday, 15 May 2020 03:17 |